Thursday, 3 July 2014

நான் படித்ததில் எனக்கு பிடித்தது - இதோ உங்களுக்காக...!


* பணக்காரன் வீட்டு வேலைக்காரி அந்த வீட்டின் வேலைகளை செய்தாலும், அவளுடைய சிந்தனையெல்லாம் தன் வீட்டின் மீதே இருக்கும். எஜமானனின் குழந்தைகளை எல்லாம் தன் குழந்தையாகப் பாவித்தாலும், அக்குழந்தைகள் தனக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை அவள் உள்மனம் நன்கு அறிந்திருக்கும். அதுபோல, உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.

* மனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி, உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய கடைய தயிரிலிருந்து வெண்ணெய் உண்டாகும். வெண்ணெயை நீரில் வைத்தால் அது நீருடன் கலப்பதில்லை. மிதக்க தொடங்கி விடும். அதுபோல், பக்தியாகிய ஞானத்தை கடைந்தெடுத்தால் உலகமாகிய நீரில் மிதக்கலாம். உலகத்துடன் கலக்காமல் தனித்து நிற்கும் வலிமை உண்டாகும்.

* தெரிந்து சொன்னாலும், தெரியாமல் சொன்னாலும், தன்னறிவில் சொன்னாலும், அறியாமல் சொன்னாலும், எந்த நிலையில் சொன்னாலும் பகவான் நாமத்தைச் சொன்னதற்கான பலன் ஒருவனுக்கு நிச்சயம் உண்டு. அப்படி சொல்லும்போது மலையளவு பாவங்கள் குவிந்திருந்தாலும், பஞ்சுப்பொதி மீதிட்ட நெருப்பினை போல் எரிந்து சாம்பலாகி விடும்.

Wednesday, 2 July 2014

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்...?

கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன.

இதைக் கண்ட கர்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான்.

இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.

அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா? சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது.

ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன். மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்.

Friday, 31 January 2014

ஆம் ஆத்மி வெளியிட்ட ‘ஊழல்வாதிகள்’ பட்டியலில் சிதம்பரம், வாசன், அழகிரி, கனிமொழி, ராசா..!



ஆம் ஆத்மியின் நிறுவனத் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லியில் ‘ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு  எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் நான் தொடங்கிவைத்துள்ள இந்தப் பட்டியல் போலவே நீங்களும் (ஆம் ஆத்மி தொண்டர்கள்) தயாரிக்கலாம். அதனை கட்சியிடம் அளியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பங்கேற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்ட கேஜ்ரிவால் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.இந்தப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுகவைச் சேர்ந்த மு.க.அழகிரி, கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் கேஜ்ரிவால் வெளியிட்ட ஊழல்வாதிகள் பட்டியலில் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, சுரேஷ் கல்மாடி, நிதின் கட்காரி, ஜி.கே.வாசன், சுஷில் குமார் ஷிண்டே, பிரஃபுல் படேல், எடியூரப்பா, ஆனந்த் குமார், வீரப்ப மொய்லி, குமாரசாமி, ப.சிதம்பரம், அழகிரி, கனிமொழி, சல்மான் குர்ஷித், அன்னு தாண்டன், ஆ.ராசா, தருண் கோகாய், கபில் சிபல், மாயாவதி, முலாயம் சிங், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், பவன் பன்சால், ஃபரூக் அப்துல்லா மற்றும் நவீன் ஜிண்டால்.-ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்

இந்தப் பட்டியலை வெளியிட்டு பேசிய கெஜ்ரிவால், “நான் நாட்டில் உள்ள நேர்மையற்றவர்கள் (அரசியல்வாதிகள்) பட்டியலை தயாரித்துள்ளேன். இந்தப் பட்டியலில் நேர்மையான அரசியல்வாதிகள் எவரேனும் இருந்தால், தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள்.இந்தப் பட்டியலில் உள்ளவர்களை தோற்கடிக்கச் செய்வதா அல்லது நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதா என்பதை நாட்டு மக்களிடமே கேட்கிறேன்.

நான் தொடங்கிவைத்துள்ள இந்தப் பட்டியல் போலவே நீங்களும் (ஆம் ஆத்மி தொண்டர்கள்) தயாரிக்கலாம். அதனை கட்சியிடம் அளியுங்கள்.எங்களுடைய நோக்கம் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்ல; பாஜக, காங்கிரஸ் போன்றவர்களுக்கு எதிராக அரசியல் செய்வதும் அல்ல. ஊழல்வாதிகளை நாடாளுமன்றத்துக்குள் அனுப்பக் கூடாது என்பதே எங்களது நோக்கம்” என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.

குறிப்பாக, தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக ரூ.500 கோடி செலவு செய்யும் இவர்கள் (மோடி, ராகுல்) நேர்மையான அரசைத் தரக்கூடியவர்களா? இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நம்மிடம் இருந்து பணத்தை மீட்டுக்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

ராமனின் விளைவை பயன்படுத்தி மனித மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்த முயற்சி..!



மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம்.

ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் ராமனின் விளைவை பயன்படுத்தும் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

ஹென்றி போர்டு மருத்துவமனையில் இன்னோவேஷன் அமைப்பின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இது 99.5 சதவீதம் துல்லியம் வாய்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மனித மூளையில் நரம்பு செல்களை சுற்றி திசுக்கள் உள்ளன. இதனை சுற்றி கிளையோபிளாஸ்டோமா மல்டிபோர்ம் (ஜி.பி.எம்.) எனப்படும் புற்று கட்டிகள் அதன் மீது படர்கிறது. இக்கட்டிகளை நீக்கி சிகிச்சை மேற்கொள்வது மருத்துவர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

இந்த கட்டிகள், சீரான முனைகள் கொண்டு இருக்கும். மூளை திசுவிற்கும் இக்கட்டிகளுக்கும் வேறுபாடு இருக்கும். இது ஆரோக்கியமான திசு மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு கடினம் என்பதால் அவற்றை நீக்குவதில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பது அரிதாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், இது சரியான பலனளிக்கவில்லை. எனவே, மிக துல்லியமாக, திறமையாக மற்றும் குறைந்த செலவில் மூளை திசுவில் இருந்து புற்று கட்டிகளை உருவாக்கும் திசுக்களை விரைவாக வேறுபடுத்தி அறுவை சிகிச்சை அறையில் அதனை கண்டறிவதற்காக ஹென்றி போர்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்கள் இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற ராமன் ஒளி விளைவு சோதனையை அடிப்படையாக கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் முடிவில் உள்ளனர்.

 குறிப்பிட்ட பரப்பில் ஒளிகளை சிதற செய்து அவற்றில் தேவையற்ற திசுக்களை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேம்பட்ட முறையில் இந்த ஆய்வு முடிவு உலக அளவில் மூளையில் உருவாகும் கட்டிகளை குணப்படுத்த முதல் முயற்சியாக இது அமையும். மேலும், தொடர்ந்து ராமன் விளைவு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று ஆய்வின் தலைவரான ஸ்டீவன் என். கல்கானிஸ் தெரிவித்துள்ளார்.

கணவருக்கு பிடித்த நடிகை போல மாறிய மனைவிக்கு நேர்ந்த கதி..!



சவுதி அரேபியாவில், தனது கணவருக்கு பிடித்த ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி, அதையடுத்து முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனைவியை கணவர் விவகாரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டது அந்நாட்டு ஊடகங்களின் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்தப் பெண்ணின் கணவர், பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்டஷியானின் வெறித்தனமான ரசிகராக இருந்து வந்துள்ளார். அவர் நடித்த படங்களை தொடர்ந்து வீடியோவில் போட்டுப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து வந்த கணவனின் போக்கை மாற்ற அவரது மனைவி ஒரு முடிவெடுத்தார்.அதன் படி முதலில், நடிகை கிம் கர்டஷியான் பாணியில் சிகையலங்காரம் செய்துக் கொண்டார்.

நடிகையின் மீது தனது கணவனுக்கு உள்ள ஈர்ப்பு தன் மீது இல்லாமல் போனதை அறிந்து வேதனைப்பட்ட அந்த பெண், சவுதியின் பிரபல ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ நிபுணரிடம் சென்று தனது முக அமைப்பையும் கிம் கர்டஷியானைப் போலவே மாற்றிக் கொண்டார்.

‘நடிகையை மறந்துவிட்டு இனி நம் மீது மட்டும் கணவர் பூரணமாக அன்பு செலுத்துவார்’ என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பிய அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் செய்கையும் (புதிய) முக அமைப்பும் தனக்கு பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவரை விவாகரத்து செய்துவிட்ட கணவன் இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட’ அவரது வாழ்க்கை ஊடகங்களின் விவாதப் பொருளாகவும் மாறிவிட்டதை எண்ணி பல சவுதி பெண்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

நாகேஷ் – நினைவுக் குறிப்புகள்



தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார்.

 தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.”நான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அம்மனோ சாமியோ’ என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.

ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, “பிசி’யாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. “நம்மவர்’ படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார். இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். 10 வருடங்களுக்கு முன், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷுக்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.

நகைச்சுவை நாயகன் நாகேஷ்!: தமிழ் சினிமாவில், ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ், இன்று அவர்களை கண்ணீர் விட வைத்து இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் குண்டுராவ். கடந்த 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.

இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை “கம்ப ராமாயணம்’ நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார்.

 ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார்.

 இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர்.

தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்’ என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.”மேக்அப்’ போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.

தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. “தாமரைக்குளம்’ இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.”திருவிளையாடல்’ படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. “காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, “சியர்ஸ்’ சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.

“தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல்’ என்று, அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். “அபூர்வ சகோதரர்கள்’ “மைக்கேல் மதன காமராஜன்’ “மகளிர் மட்டும்’ ஆகிய படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான “தசாவதாரம்’ வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம் பெற்றார். மகளிர் மட்டும் படத்தில் “பிணமாக வாழ்ந்த’ நாகேஷ் நடிப்பு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது.நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?’ என்றார்.சிரித்தபடியே நாகேஷ், “உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா… அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா… மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் “அம்மை’ என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது’ என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. “சிரித்து வாழ வேண்டும்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார்.

ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.சென்னை காமராஜர் அரங்கில், 2007, ஜூன் 17ல் “என்றென்றும் நாகேஷ்’ பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல், பாக்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். இவருக்கு நடிகர் ஆனந்த் பாபு உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர். திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.

இயக்குநர் சிகரம் கே. பால்சந்தர் நாகேஷ் பற்றி சொன்ன விஷ்யங்களில் சில:

தமிழில் மட்டுமல்லாது பிறமொழிக் கலைஞர்களுக்கும் ஆதர்ச ஆசானாக விளங்கியவர் நாகேஷ். ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தை இந்தியில் எடுத்தபோது, நாகேஷின் பாத்திரத்தில் நடித்த மகமூத் அவர் காலில் விழுந்து வணங்கினார். கலைவாணருக்கு அடுத்த சிறந்த கலைஞன் சந்தேகமே இல்லாமல் நாகேஷ்தான்! அவருக்காகவே நான் எழுதிய நாடகம் தான் ‘சர்வர் சுந்தரம்’. அதற்குள் அவர் மூன்று படங்களில் காமெடியனாக நடித்துப் பிரபலமாகிஇருந்தார்.

‘சர்வர் சுந்தரம்’ முழுக்க மெல்லிய சோகம் இழையோடும் கதாபாத்திரம். காமெடியனாகப் பிரபலமாகிவிட்ட நாகேஷ் இப்படியரு சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் எங்கள் இருவருக்கும். ஆனால், எங்களுக்கு நாங்களே நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொள்வோம். நாடகம் பெருவெற்றி பெற்றது. ‘நீர்க்குமிழி’ படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் குடிப்பதால் கேன்சரால் பாதிக்கப்படும் கதாபாத்திரம் அவருக்கு. அப்போது நானே செயின் ஸ்மோக்கர். ஆனாலும், புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பேச வேண் டும் என்று தோன்றியதால் அந்தப் படத்தை இயக்கினேன்.

நாகேஷூக்கும் எனக்கும் ‘வெள்ளிவிழா’படத்தின் போது பிரிவு ஏற்பட்டது. அவரால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கோபத்தில் நான் ‘தேங்காய்’ சீனிவாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கினேன். பாதி படத்தின்போதே எனக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தேன். மனத்தாங்கல் இருந்தபோதும் என்னை மருத்துவமனையில் நாகேஷ் வந்து பார்த்து, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்தினேன். சிகரெட்டையும் நாகேஷையும் பிரிந்திருந்த காலகட்டம் அது!

நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்றதும் செட்டில் எல்லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக்.

டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம்.

‘அந்த நாகேஷ் இல்லை’ என்ற நினைப்பே ஏதோ ஒரு தனிமை உணர்வுக்கு என்னை ஆட்படுத்துகிறது. ‘நீர்க்குமிழி’ பாடலின் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல்தான் இப்போதைக்கு எனக்கு ஆறுதல் மருந்து!

Tuesday, 21 January 2014

மூத்த குடிமக்களை பாதுகாக்க 10 அம்ச திட்டம - மத்திய அரசு வெளியீடு..!



அண்மை காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள் முதியோரை தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

 பல சமயங்களில் மூத்த குடிமக்கள் கொடூரமாக கொலையும் செய்யப்படுகின்றனர். இதையடுத்து”முதியோர் மிகவும் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என தெரிவித்துள்ள மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் 10 அம்சங்களைத் தெரிவித்து அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு தெரிவித்துள்ள திட்டங்கள்:-


*முதியோர் வாழும் பகுதிக்கு ஏற்ப அவர்களின் பாதுகாப்பு குறித்து சரியான திட்டமிடல் அவசியம். இப்போது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் முதியோர் சந்திக்க உள்ள சவால்கள், அச்சுறுத்தல்கள் என்ன என்பது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை முதியோர் உள்ளனர்; அவர்களில் எத்தனை பேர், துணையின்றி தனிமையாக உள்ளனர் என்பதை கணக்கிட வேண்டும்.

*அந்தந்த மாவட்ட போலீஸ் தலைமையகங்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தகவல் அனுப்பி முதியோருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.

*வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு, போதுமானதாக இருக்கிறதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்க்க வேண்டும். முதியோர் வசிக்கும் பகுதியில் போலீஸ் ரோந்து அதிகரிப்பது அவசியம்.

*முதியோர் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போன்ற தகவல் தொகுப்பு பராமரிக்கப்பட்டு அவ்வப்போது மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அவை மேம்படுத்தப்பட வேண்டும்.

*குறிப்பாக செல்வந்தர் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர் வசிப்பிடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து அதிகமாக இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்கள் யார், யார், வெளியே இருந்து எத்தனை பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்தகைய வேலையாட்களின் குற்ற பின்னணி போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

*அந்த வேலையாட்களை யாராவது ஒருவர் அல்லது அமைப்பு பரிந்துரை செய்திருக்க வேண்டும். தவறு ஏற்படுமானால், அந்த நபர் அல்லது அவரை பரிந்துரை செய்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்.

*இந்த ஏற்பாடுகளை போலீஸ் துறையின் மூத்த அதிகாரிகள், அவ்வப்போது கண்காணித்து, தேவைப்படின் கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவர்கள் நேரடியாக முதியோருடன் கலந்துரையாட வேண்டும்.

*மேலும் அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்தி முதியோர் பாதுகாப்பிற்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.

*விற்பனை பிரதிநிதிகள்,வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பவர்கள் போன்றவர்கள், எளிதில் முதியோரை அணுகா வண்ணமும், முதியோரை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குற்றவாளிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையிலான செயல்கள் தடை செய்ய வேண்டும்.

*போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களும், முதியோர் பாதுகாப்பிற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சாக்லேட் சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்காது..!


அதிக சாக்லேட் சாப்பிட்டாலும், சிவப்பு ஒயின் குடித்தாலும் நீரிழிவு நோய் தாக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்னடர்.

சுமார் 2 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சிவப்பு ஒயின் அருந்துபவர்களுக்கு 2–வது ரக நீரிழிவு தாக்குதல் குறைவாக இருந்தது.

அவற்றில் உள்ள ஆந்தோ சியானின்ஸ் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இன்சுலினை போதிய அளவு சுரக்க செய்து ரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைக்க உதவுகிறது. அதனால்தான் நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது தெரிய வந்தது.

ஆந்தோசியோனின்ஸ் மூலக்கூறுகள் காபி கொட்டைகள், சிவப்பு திராட்சை, ஒயின் மற்றும் சிவப்பு அல்லது நீல நிற பழங்கள் மற்றும் காய்கறி களில் அதிகம் உள்ளது. அவற்றை சாப்பிட்டாலும் நீரிழிவு நோய் தாக்காது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஈழத்தமிழ் வசனத்தில் 'யாழ்'...!!!



யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என ஈழத்தமிழ் வசனத்தில் உருவாகிறது ‘யாழ்’ திரைப்படம்.

மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக அவுஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் ‘யாழ்’.

இந்தப் படத்தில் வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கும் எம்.எஸ்.ஆனந்த் படம் பற்றி கூறுகையில், யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி.

இத்திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்திய, தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப் படத்தின் பாடல்கள் ஈழத்தமிழில் இருப்பதும், பாடலாசிரியர்களும் இலங்கை தமிழர்களே என்பதும் இதுவே முதல் முறை, வசனம் முழுவதும் இலங்கை தமிழிலே இருக்கும்.

‘யாழ்’ என்பது ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இசைக் கருவி. பாணர்கள் என்பவர்கள் இக்கருவியை வைத்துக் கொண்டு சைவ சித்தாந்த கருத்துகளையும், தமிழர்களின் கலை மற்றும் கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஊர் ஊராக சென்று பரப்பியதால் தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்தது.

மேலும் யாழ் இசையும், யாழ் கலையும், கலாச்சாரமும் சம்மந்தபட்ட கதாபாத்திரங்களுக்கு இடையில் இப்பொழுது இறுதி போரின்போது அவர்களுக்கு நடந்த நட்பு, காதல், போன்ற சம்பவங்களை மிக ஜனரஞ்சகமாக எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

சிகரெட்கள் புகைப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் - அதிர்ச்சி தகவல்....



புகைபிடித்தல் கண்புரை வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. புகை பிடிப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் எனப்படும் கேட்ட்டராக்ட் அதிக அளவில் வருவதற்க்கான வாய்ப்பு இருப்பதை சில ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும், ஒரு நாளைக்கு 20 அல்லது இருபதுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு இரு மடங்கு உள்ளது.

 புகை பிடிப்பதனால் ஒருவருக்கு கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு எவ்வாறு அதிகரிக்கிறது என்று விளக்கமாகக் கவனிப்போம்:

1. கேட்டராக்ட் என்பது நமது கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் தன்மையை இழப்பது மற்றும் லென்ஸின் தோற்றம் புகை போன்ற படலம் படர்ந்த நிலையும் கூட.

2. லென்ஸ் கிரிஸ்டலின் என்ற புரோட்டினால் ஆனது.

3. நமது உடலின் பல பாகங்களில் ஆக்ஸிஜனேற்றம் எனப்படும் செயல் தொடர்ந்து நடைபெறுகிறது.

இது மனிதர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்தினை நிலைபெறச் செய்வதற்க்கான, ஊட்டச் சத்திற்க்கான நிகரான நல்ல நண்பர் எனலாம்.

ஆக்ஸிஜனேற்றம் மூலம் நமது உடலின் செல்களை பாதுகாத்து, நோய்களிலிருந்து விலக்கிவைத்து, சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய செயல் ஆகும்.

4. இந்த ஆக்ஸிஜனேற்றம் நமது லென்ஸின் ஒளி ஊடுருவும் தன்மையை சரி வர கண்காணித்து செயல்படுத்துகிறது.

5. நமது லென்ஸ்ஸில் சூப்பராக்ஸைட் டிஸ்முட்டேஸ் மற்றும் குளுதாதயோன் பெராக்ஸைட்(superoxide dismutase and glutathione peroxides) எனப்படும் அவசியமான என்சைம்கள் உள்ளன.

6. சிகரெட் மறும் பீடிகளில் காட்மியம் மற்றும் நிக்கோடின் உட்பட சுமார் 4000 தேவையற்ற ரசாயனப் பொருட்கள் நிறைந்துள்ளன.

7. ஒருவர் சிகரெட் அல்லது பீடி புகைக்கின்ற போது அவரது இரத்தத்தில் இந்த ரசாயனப் பொருட்கள் கலந்து விடுகின்றன.

ஒருவரது இரத்த்த்தில் அதிகரிக்கும் கேட்மியம் நமது கண்களில் உள்ள லென்ஸில் உள்ள என்சைம்களான சூப்பராக்ஸைட் டிஸ்முட்டேஸ் மற்றும் குளுதாதயோன் பெராக்ஸைட் களை பாதிக்கிறது.

8. இதன் காரணமாக நமது லென்ஸில் ஒழுங்காக நடைபெற வேண்டிய ஆக்ஸிஜனேற்றம் சேதமடைகிறது.

எனவே லென்ஸ் பாதிக்கப்பட்டு தனது பணியை செய்வது, அதாவது ‘ஒளி ஊடுருவும் தன்மையை சரி வர கண்காணித்து செயல்படுத்துகின்ற வேலை’ தடை செய்யப்படுகிறது.

எனவே லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் தன்மையை இழக்கிறது.எனவே தெளிவற்ற பார்வையை அனுபவிக்கின்ற நிலை ஏற்படுகிறது. அந்நிலையே கேட்டராக்ட் எனப்படுகிறது.

9. எனவே, நியூக்ளியர் கேட்டராக்ட் புகை பிடிப்பவர்களுக்கு விரைவிலேயே வருகிறது.

10.புகை பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை உபயோகிகும் போது வெளிப்படும் கேட்மியம் கண்களின் லென்ஸில் சேரும்போது ஏற்படுத்தும் பாதிப்பு புரை வருவதற்க்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக உயிர் வேதியியல் ஆராய்ச்சிகளும் ஏற்றுக் கொள்கிறது.

 கேட்மியம் லென்ஸில் உள்ள புரோட்டீன்களோடு இணைந்து பாதிப்பினை ஏற்படுத்துவதன் மூலமாகவும், தாமிரம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்றவற்றோடு இணைந்து ஆக்ஸிஜனேற்றத்தினை படிப்படியாக குறைத்து நேரடியாக அல்லாமலும் பாதிப்பினை ஏற்படுத்தும் போது கண் புரை வருவதற்க்கான வாய்ப்பினை புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கும் குறைந்த வயதிலேயே ஏற்படுத்துகிறது என்பதையும்,

புகைபிடிப்பதை நிறுத்துகின்ற காலத்தில் கேட்மியம் லென்ஸில் சேருவது நிறுத்தப்பட்டு, கன் புரை வருவதற்க்கான சாத்தியக்கூறினை தாமதிப்பதும் சென்னை, சங்கர நேத்ராலயாவின் பார்வை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலும் கண் புரை மட்டுமல்லாது, வயது சார்ந்த மாக்குலா பாதிப்பு,நீரிழிவு விழிதிரை நோய், தைராய்டு கண் நோய்கள், மற்றும் கண் நரம்பு சார்ந்த பிரச்சினைகளும் அதிகமாக பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

ஈவ்னிங் டயட் சூப் ரெசிப்பி....!




வெஜ் சூப்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய கேரட்,

 பீன்ஸ்,

காலிஃப்ளவர்,

 முட்டைகோஸ் – ஒரு கப்,

வெங்காயம் – ஒன்று,

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,

சோள மாவு – 3 டீஸ்பூன்,

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,

கொத்தமல்லி – சிறிதளவு,

சர்க்கரை – அரை டீஸ்பூன்,

 உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும், பொடியாக நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.

 காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் விடவும்.

பிறகு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து இறக்கி… சூடாகப் பரிமாறவும்.

குடியரசு தினத்தில் ரிலீஸாகும் படங்கள்.....



குடியரசு தினத்தையொட்டி ‘நேர் எதிர்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘கோலி சோடா’, ‘நினைத்தது யாரோ’ ஆகிய 4 புது படங்கள் ரிலீசாகிறது.

பொங்கலுககு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் வந்ததால் தியேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகையால் பொங்கலுக்கு சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தற்போது அவை குடியரசு தினத்தையொட்டி வருகின்றன.

‘நேர் எதிர்’ படத்தில் ரிச்சர்ட், பார்த்தி வித்யா, ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜெய பிரதீப் இயக்கியுள்ளார். ஆக்ஷன், திரில்லர் படமாக தயாராகியுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.

‘கோலி சோடா’ படம் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் தயாராகியுள்ளது. கிஷோர், பாண்டி போன்றோர் நடித்துள்ளனர். குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. திருப்பதி பிரதர்ஸ் என்.சுபாஷ் சந்திரபோஸ் இப்படத்தை வெளியிடுகிறார். பரத் சீனி தயாரித்து உள்ளார்.

‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படம் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. நடிகை ஸ்ரீப்ரியா இப்படத்தை இயக்கியுள்ளார். க்ரிஷ், நித்யா மேனன் நடித்துள்ளனர். ஆண்களின் வக்கிரமங்களுக்கு எதிராக போராடும் இளம் பெண்ணை பற்றிய கதை.

‘நினைத்தது யாரோ’ படத்தை விக்ரமன் இயக்கியுள்ளார். நாயகனாக ரஜித், நாயகியாக நிமிஷா நடித்துள்ளனர். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி.ரமேஷ், இமானுவேல் தயாரித்து உள்ளனர். காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. ஸ்டுடியோ 9 பட நிறுவனம் சார்பில் ஆர்.கே. சுரேஷ் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்து கொண்டால்....



பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன.

அதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். தன்னை விட பெரிய ஆண்களை திருமணம் செய்து கொண்டால், ஏதேனும் கஷ்டமான பிரச்சனையின் போது சரியாக முடிவெடுக்கத் தெரியவில்லையென்றால், அத்தகையவரை திருமணம் செய்து கொள்ளும் போது, ஈஸியாக சரிசெய்து விடலாம்.

எத்தகைய பிரச்சனைக்கு எப்படி நடக்க வேண்டும் என்று நன்கு தெரியும். ஆகவே இந்த வாழ்க்கைப் பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருப்பார்கள்.

எனவே திருமணத்திற்குப் பின், வாழ்க்கையில் எந்த ஒரு பணப் பிரச்சனையும் இருக்காது. பின் எதிர்காலத்தில் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். வயது அதிகம் உள்ளவர்கள் எதையும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, குறும்புத்தனமாக ஏதாவது ஒரு செயலை செய்தால், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டு, கடுமையாக நடப்பார்கள்.

அதே சமயம் அவர்கள் குறும்புத்தனம் என்று நினைத்து ஏதேனும் செயலைச் செய்வது, நமக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும். வயது குறைவாக இருக்கும் பெண்கள் வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, ஆண்களும் ஒருவித நம்பிக்கையில்லாத கோபம் வரும்.

அது என்னவென்றால், வயது குறைவாக இருப்பதால், தன் மனைவி இளம் வயது ஆண்களுடன் நட்புறவுடன் பேசும் போது, கோபம் வந்து சண்டை போடுவார்கள். ஆகவே எதுவானாலும், சரியான புரிதல் இருந்தால், எந்த ஒரு வாழ்க்கையும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் சந்தோஷமாக செல்லும்

விரைவில் விஜய் - சமந்தா...



முதல் முறையாக நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரவுள்ளராம் நடிகை சமந்தா.

கடந்த 2012ம்ஆண்டு விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது விஜய் முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது. இந்த படத்தின் தலைப்பு 'வாள்' எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்தப் படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பார் என்று செய்தி பரவியது. அதனை தொடர்ந்து தீபிகா படுகோன் நடிப்பார் எனவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சற்று முன் கிடைத்த தகவலின் படி
இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளாராம்.

விஜய்யுடன் ஏற்கெனவே ஜோடி சேரவிருந்தவர் சமந்தா. ஆனால் அப்போது அவருக்கு சரும நோய் பிரச்சினை இருந்ததால், அவருக்குப் பதில் அமலா பாலை தலைவாவில் ஜோடியாக்கிக் கொண்டார் விஜய். அப்போது தவற விட்ட வாய்ப்பை இப்போது மீண்டும் பெற்றுள்ளார் சமந்தா.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் விஜய் மோதலை அடுத்து சிம்பு தனுஷ் மோதல்!



சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வாலு திரைப்படத்தின் இசை வெளியீடு வருகிற காதலர் தினத்தில் வெளியாகவிருக்கிறது. அதே நாளில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்தின் இசையும் வெளியாகவுள்ளது.

சமீபமாக இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோரது ஜில்லா மற்றும் வீரம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாக்கின.

விஜய்மற்றும் அஜித் ரசிகர்கள் மோதலில் ஈடுபடக்கூடதென இரு பெரும் நட்சத்திரங்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

விஜய் - அஜித்தின் மோதலுக்குப் பிறகு வருகிற காதலர் தினத்தில் சிம்பு மற்றும் தனுஷ் மோதவுள்ளனர்.

இரு நட்சத்திரங்களுமே சமமான அளவில்
ரசிகர்களைக் கொண்டிருப்பதால் இம்முறையும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவருமே இந்த வெளியீட்டினைப் பேரார்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

வாலு மற்றும் வேலையில்லாப் பட்டதாரி படங்களின் ஆடியோ ஒரே நாளில் வெளியாவதை வாழ்த்தியிருக்கும் சிம்பு, போட்டிக்குத் தயாரா என தனுஷிடம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க...



காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும்.

ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம். ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை.

 மேலும் நிபுணர்கள் கூட இந்த ஜூஸ்களை குடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். எனவே இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் காய்ச்சல் வருவதற்குள், அவைகளை சரிசெய்ய கீழ்க்கூறிய ஜூஸ்களை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடலாம்.


இஞ்சி ஜூஸ், புதினா ஜூஸ் , கேரட் ஜூஸ், லெமன் ஜூஸ்,தர்பூசணி ஜூஸ்,வாழைப்பழ ஜூஸ்,கிவி ஜூஸ்,அன்னாசிபழ ஜூஸ்.

 குறிப்பு: இந்த ஜூஸ்களை குடிக்கும் போது, அதில் குளிர்ச்சியான தண்ணீரோ, பாலோ அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்க்கக் கூடாது.

அடிக்கடி பசி ஏற்படுவதைத் கட்டுப்படுத்தும் யோகாக்கள்!!!




உணவுகளின் மீது தீவிர நாட்டம் ஏற்படும் போது மனதுக்கு பிடித்த பல வகையான உணவுகளை அளவு பார்க்காமல் உண்ணுவோம். ஆனால் நாம் அளவோடு உண்ணவில்லை என்றால் நம் அன்றாட உணவு பழக்கத்தை பாதித்து பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். துரதிர்ஷ்டவசமாக, சுயக் கட்டுப்பாடும், ஒழுக்கமும் சுலபம் இல்லை. அதுவும் உணவு விஷயங்களில் மிகவும் அவைகளை கடைப்பிடிப்பது கடினம். ஆனால் உணவுகளின் மீது இப்படி பைத்தியமாக இருப்பதை தவிர்க்க ஒரு வழி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது; ஆம், அது தான் யோகா!

தினமும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்!!!

யோகாவால், பசிக்கு அடங்கிவிடும். இந்த தடையால் கிடைக்கும் நன்மைகளை பற்றி யோகாவை சீரான முறையில் செய்பவர்களுக்கு நன்றாக தெரியும். யோகாவை சீரான முறையில் செய்பவர்களுக்கு கட்டுக்கோப்பான உடலமைப்பு, அமைதியான மனது, உடலின் மீது அளவுக்கு அதிகமான திருப்தி மட்டுமல்லாது ஒரு வித சுய ஒழுக்கமும் ஏற்படும். அதனால் பசியை கட்டுப்படுத்த யோகா ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.

பசியை அடக்க யோகாவின் எளிய ஆசனங்கள்:

பல விதமான மூச்சுப் பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் தியானங்களின் கலவையே யோகா. உங்கள் உடலில் உள்ள தேவதையும் சாத்தானும் சீஸ் கேக்கை நீங்கள் உண்ணலாமா வேண்டாமா என்று பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறதா? இருவரின் பேச்சையும் கேட்காதீர்கள். மாறாக அவர்களை விரட்டியடித்து, கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். பின்வரும் எளிய யோகாசனங்களை செய்திடுங்கள்.
 தெரிந்து கொள்ள வேண்டியவை:

 யோகாசனங்கள் மூலம் குணப்படுத்தக்கூடிய 10 நோய்கள்!!!
நின்று கொண்டு முன் பக்கமாக குனிதல்:
• சுவற்றில் இருந்து ஒரு அடி தள்ளி, எழுந்து நின்று (நீங்கள் ஏற்கனவே அமர்ந்திருந்தால்) காலை விரித்துக் கொள்ளுங்கள். இரண்டு கால்களுக்குள் உள்ள இடைவெளி, உங்கள் இடை அகலத்துக்கு இருக்க வேண்டும்.

 • உங்கள் பின்புறத்தை அப்படியே சுவற்றின் மீது சாய்த்துக் கொள்ளுங்கள். பின் மெதுவாக முட்டியை வளையுங்கள். உங்கள் மேல் உடலை முன்பக்கமாக மடக்குங்கள். அதனால் உங்கள் வயிறும் நெஞ்சும் உங்கள் தொடை மீது வளைய வேண்டும்.

 • சிறிது முறை மூச்சு விடுங்கள்; உதாரணத்திற்கு, மூச்சை வெளியே விடும் போது 6 முறை மூச்சுப்பயிற்சியில் ஈடுபடலாம். பின் மெதுவாக நிமிர்ந்து, உங்கள் பின்புறத்தை மெதுவாக சுவற்றின் மீது சாய்க்கவும்.

• கண்களை மூடிக்கொண்டு, சிறது மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டு உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உடலாற்றலை பொறுத்து இதனை 3-4 முறைகள் செய்திடுங்கள். குழந்தைகளின் ஆசனம் (பாலாசனா):

• தரையில் முட்டி போட்டு இடுப்பை குதிகாலின் மீது வையுங்கள். முட்டி இடுப்பு அகலத்தை விரிவு படுத்துங்கள்.

• அடுத்து, ஆழமாக மூச்சிழுத்து பின் மூச்சை வெளியேற்றுங்கள். பின் மெதுவாக உங்கள் நெஞ்சை முன் பக்கமாக வளையுங்கள். முழுவதுமாக வளைந்த பின்பு வயிற்றையும் நெஞ்சையும் தொடைகளின் மேல் படுமாறு செய்யவும். உங்கள் உடல் ஒத்துழைத்தால், நெற்றியை தரையின் மீத்து படுமாறு வளைந்திடுங்கள்.

 • மேற்கூறிய நிலையை அடைந்த பிறகு, உங்கள் கைகளை தரையில் மீது வைத்திடுங்கள். உங்கள் உள்ளங்கை தரையை பார்த்தவாறு கைகளை முன்பக்கமாக நீட்டிக் கொள்ளலாம் அல்லது உள்ளங்கை கூரையை பார்த்தவாறு உங்களது கைகளை பின்பக்கமாக கட்டிக்கொள்ளலாம்.

 உங்கள் உடல் எந்தளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறதோ அத்தனை மணி நேரத்திற்கு மேற்கூறிய ஆசனங்களை செய்திடுங்கள்.

அதிலும் இந்த ஆசனங்களை 3-4 முறை செய்திடுங்கள். அடுத்த முறை உணவுகளின் மீது தீவிரமான நாட்டம் ஏற்படும் போது, உங்கள் மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உடலில் உள்ள ஆற்றலை கொஞ்சம் எரித்திட வேண்டும்.

மேற்கூறிய இரண்டு ஆசனங்களையும் சீரான முறையில் செய்து சுயக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உணவுகளின் மீது உங்களுக்கு இருக்கும் தீவிரமான ஆர்வம் குறைந்து அளவாக உட்கொண்டு உடலை கட்டமைப்புடன் வைத்திருப்பீர்கள்.

Monday, 20 January 2014

மனம்விட்டு பேசிப் பழகும் நண்பர்களாக,சிம்பு - நயன்தாரா...



 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்து நடிக்கும் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் மனம்விட்டு பேசிப் பழகும் நண்பர்களாக வலம் வருகிறார்கள்.கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சிம்பு நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் இருவரும் காதலை முறித்துக்கொண்டு பிரிந்தனர்.

இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தனது புதிய படத்துக்கு சிம்புவை நாயகனாக ஒப்பந்தம் செய்தார். உடனடியாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் நாயகி தேர்வில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இறுதியில் கதைக்கு நடிகை நயன்தாரா பொருத்தமானவராக இருப்பார் என்ற யோசனை எழுந்தது.

கதை சொன்னபோது, எந்த மறுப்பும் இல்லாமல் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி இந்த படத்துக்கு தொடர்ந்து 15 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்காக இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஜனவரி முதல் வாரத்தில் படமாக்கத் திட்டமிட்டிருந்தார்கள்.

புத்தாண்டை ஒட்டி நடிகர் சிம்பு அமெரிக்கா சென்றதால் படப்பிடிப்பு பொங்கல் விடுமுறையில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களாக சிம்பு - நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்து நடிக்கும் இருவரும் முதல் நாள் படப்பிடிப்பு முதலே உற்சாகமான நண்பர்களாக பேசிப் பழகி வருகிறார்களாம். மதிய உணவு இடைவேளையின்போது இருவரும் படக்குழுவினருடன் உணவை பகிர்ந்து உண்டு, சகஜமாக பழகி வருகின்றனர். தொடர்ந்து இந்த வார இறுதி வரை இருவரும் கலந்துகொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

கிட்டத்தட்ட 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்திருக்கும் சூழலில் சிம்பு- நயன் தாராவின் காதல் காட்சிகள் சிறப்பாக படமாகி வருவதில் கூடுதல் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர், படக்குழுவினர்.

விஜய்சேதுபதி– விஷ்ணு, யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து....



பையா, வழக்கு எண் 18/9,வேட்டை, கும்கி, இவன் வேற மாதிரி ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் N.லிங்குசாமி, N.சுபாஷ் சந்திபோஸ் தயாரிப்பில், தென்மேற்குப்பருவக்காற்று,நீர்ப்பறவை ஆகியவெற்றிப்படங்களை இயக்கிய,தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் திரைப்படம் இடம் பொருள் ஏவல்’.

விஜய்சேதுபதி– விஷ்ணு கதாநாயகர்களாக நடிக்கும் இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்து ஆகிய இருவரும் முதன்முறையாக இணைகின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசைக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.

இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் , இயக்குனர் லிங்குசாமி இருவரின் விருப்பத்தினை ஏற்று, யுவன்சங்கர் ராஜா, வைரமுத்து கூட்டணி இடம் பொருள் ஏவல் படத்திற்காக முதன்முறையாக இணைகிறது.

இப்படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இப்படத்தில் வெளிப்புறப்படப்பிடிப்பு முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் கொடைக்கானலில் தொடங்குகிறது.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் எண்ட்ரி..!!!



மோகன்லால் அளித்த விருந்துக்கு திடீர் எண்ட்ரி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

1980ம் ஆண்டுகளில் நடித்து அப்போது டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி விருந்துண்டு மகிழ்வது வழக்கம்.

தமிழ்நாட்டில் சுஹாசினி, லிஸி, குஷ்பு, ஸ்ரீப்ரியா ஆகியோர் இந்த விருந்தை நடத்தினர். ஆந்திராவில் சிரஞ்சீவியும், கன்னடத்தில் அம்ரிஷூம் நடத்தினர்.

இந்த ஆண்டு மோகன்லால் நடத்தினார். 80களில் பிரபலமாக இருந்த அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ரஜினியையும் அழைத்தனர்.

அவர் நான் கோச்சடையான் பணியில் பிசியாக இருப்பதால் வர இயலாது என்று தெரிவித்திருந்தாராம்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மோகன்லால் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த டின்னருக்கு 80களில் டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

அந்த விருந்திற்கு யாரும் எதிர்பாராத வகையில் வந்தார் ரஜினி. விருந்து முடியும் வரை அவர்களோடு இருந்து ஜாலியாக சிரித்து பேசிவிட்டு கிளம்பி விட்டாராம்.

இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி வாய்ப்பு!



இந்தியாவின் அதிகமாக பணி வாய்ப்புகளை வழங்கி வரும் இந்திய ரயில்வே, ரயில்வே போலீஸ் போர்ஸ் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையின் பல்வேறு கிளைகளில் உள்ள காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 659
துறைவாரியான காலியிடங்கள்: ஆர்.பி.எப்.,பில் வாட்டர் கேரியரில் 406, சபாய்வாலாவில் 117, வாஷர்மேனில் 53, பார்பரில் 61, மாலியில் 7, டெய்லரில் 9, காப்ளரில் 6

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின் அடிப்படையில் 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிசிகல் மெஷர்மெண்ட் டெஸ்ட், டிரேடு டெஸ்ட் ஆகிய நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படும். பின்னர் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.40. இதனை போஸ்டல் ஆர்டர் வாயிலாக கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுகள் குறித்த விவரம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கண் விழிதான் இனிமே உங்க கம்ப்யூட்டர் செக்யூரிட்டி…!



கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழி – இது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும்.

இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு.

இதை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் / டிவிட்டர் போன்ற அத்தனை சோஷியல் மீடியா/ வங்கி கணக்குகளுக்கு இனிமேல் பாஸ்வோர்ட் இல்லாமல் திறக்க இயலும்.

 இது எவ்வகை பாஸ்வோர்ட்டையும் உடைக்கும் திறனான சாஃப்ட்வேருக்கு சவால் இந்த மவுஸ். இதே போல் மவுஸை வைத்து ஒரு பெரும் புரட்சி செய்யும் டெக்னாலஜி பொருளை நான் இன்னும் சில நாட்களில் லான்ச் செய்ய உள்ளேன்.

தமிழ்ப் பழமொழியும் என் தாத்தனும்..!



 விசாரம் முற்றினால் வியாதி.
  • கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்.

 
பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.

  • நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.

காற்றில்லாமல் தூசி பறக்காது.

  • நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி

பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.

  • நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.

 பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.

  • துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்..?

பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

  • பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி

 இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.

  • விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது

கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.

  • தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.

வாங்குகிற கை அலுக்காது.


  • வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ..?

மாமேதை லெனின் நினைவு தினம் இன்று..!



மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனினின் நினைவு தினம் இன்று...

உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின்.

 மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பவும், மார்க்சிய மெய்ஞானத்தின் ஆற்றலை உழைக்கும் மக்களுக்கு எடுத்துக் கூறவும், ஜார் மன்னரின் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கானப் புரட்சிப் படையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் லெனின்.

 இதற்கெல்லாம் அடிப்படையாக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். குழந்தைகளிடமும் விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடம் லெனின் அக்கறை காட்டினார். நாட்டின் எந்தக் கோடியிலிருந்து கடிதம் வந்தாலும் அவற்றைப் படித்துப் பார்த்து, தகுந்த நடவடிக்கை எடுத்தார்.

 மிகப் பெரும் தேசத்தின் தலைவராக இருந்தும் எளிமையாக ஒரு சின்ன அறைக்குள் வாழ்ந்த அவரது பண்பு வியக்கத்தக்கது. மாஸ்கோவை நிர்மாணித்த அவருடைய திறமை போற்றத்தக்கது.

கொழுப்புக்கு குட்பை..! உடல் கொழுப்பு அதிகமானால் ..?



நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது.

வாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும்.

ஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை தினமும் உண்டால் நம இரத்தத்தில் கொழுப்பு சேராது.

காலையில் காபியோ அல்லது தேனீரோ அருந்தலாம். ஆனால் அதில் ஆடை நீக்கிய பாலும், சர்க்கரையும் குறைவாக இருக்கவேண்டும்.

நினத்தபோதெல்லாம் காபி அல்ல தேநீரை அருந்துவது, நண்பர்களுக்கு கம்பெனி தருவதாக நொண்டிச்சாக்குச் சொல்லிச் சொல்லி அடிக்கடி தேநீர் குடிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

‘வேறு வழியில்லாமல் குடித்து விட்டேன் இப்போ நெஞ்செரிச்சல் ஆரம்பித்து விட்டது’ என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம். கொழுப்பக் குறைப்பது என்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் குடும்ப நன்மைக்காகவும்தான்.

சாப்பிடத்தெரிந்து கொள்ளுங்கள்

என்னங்க இது கூடவா தெரியாது? ரொம்பத்தான் ... என்று சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது. காலை டிபனுக்கு எல்லாவற்றயும் வளைத்துக்கட்ட வேண்டாம். மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை போதும். போதுமா என்கிறீர்களா? போதும்தான். உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் கிடக்கும் என்பதைப்போல உழைப்பிற்கு ஏற்ற உணவுதான் உண்ணவேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

தோசைக்கு எண்ணெய் விடாமல் இருப்பது நல்லது. சட்னிக்கு தேங்காய் வேண்டாம். காரம், புளி, உப்பு இவை குறைவாக வைத்துச் செய்த ஏதாவது ஒரு சட்னியைத் தொட்டுக் கொள்ளுங்கள். தோசைக்கு சொத சொதவென்று எண்ணெய் விட்டுக் கொண்டும் மிளகாய்ப்பொடியை ஏராளமாக எண்ணெய் விட்டு குழைத்துக் கொண்டும் இதுவரையில் சாப்பிட்டவர்களுக்கு நான் மேலே குறிப்பிட்டபடி சாப்பிடப் பிடிக்காது.

உண்மைதான் ஆனாலும் என்ன செய்வது? நீங்கள் இதுவரையில் உங்கள் விருப்பப்படி சாப்பிட்டுவிட்டீர்கள். அது போதும். இனிமேல் உங்கள் ஆரோக்கியத்திற்காக நாக்கை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காலை டிபனோடு ஒரு டம்பளர் தண்ணீரில் பாதி மூடி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, சிறிது உப்பு சேர்த்து ஜூஸாக குடியுங்கள்.

எனக்கு டிபன் சாப்பிட்டால் சூடாக ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் திருப்தி என்ற கதையெல்லாம் வேண்டாம். காலை ஒன்பது மணிக்குள் டிபனை முடித்துக் கொண்டு சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுங்கள்.

பகல் உணவை வெந்த காய்கறிகள், கீரை, ஒரு சப்பாத்தி, இவற்றோடு குறைவான அளவு சாதத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம், இரண்டு கப் காய்கறிகள், ஒரு கப் மோர் இவற்றோடு ஒரு கப் சாதம் என்று சாப்பிடுவ மிகவும் நல்லது.

இவ்வாறு சாப்பிட்டால் எளிதாக செரிமானம் ஆகும். மூன்று மணிநேரத்திற்கு பசி இல்லாமலும் இருக்கும். நன்றாகக் கடைந்த மோர் ஒரு தம்ளர் குடியுங்கள். இதற்குப் பிறகு எதுவும் வேண்டாம். மாலை டிபன் வேண்டும் என்றால் காய்கறிகள பச்சையாக நறுக்கி அவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு பிரட் துண்டுகளச் சாப்பிடுங்கள். அவசியமானால் பால் குறைவான தேநீர் அல்ல காபி அருந்தலாம். சர்க்கரையை குறைவாக உபயோகிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே அவசியம்தான்.

இரவு நேரத்தில் நெய் விடாத சப்பாத்தி, முளைகட்டிய கடலையில் மிளகும் உப்பும் தூவி செய்த டிஷ் செய் சாப்பிடுங்கள். இது வேண்டாம் என்றால் கோதுமை ரவையுடன் பாசிப்பயறு கலந்து மிளகுத்தூள் சேர்த்து பொங்கலாக்கிச் சாப்பிடுங்கள். இது என்ன ஏக கெடுபிடியாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இவ்வாறு திட்டமிட்டுச் சாப்பிட்டால் உடம்பில் அதிக எடை சேராது. கொழுப்பும் ஏறாது. இதயநோய்களுக்கு டாடா சொல்லிவிட்டு ஆனந்தமாக வாழலாம்.

கொழுப்பு என்ன செய்யும்?

இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகிவிட்டால் இரத்தக்குழாய்களின் உட்புறச் சுவர்களில் கொழுப்பு படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. எனவே இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத்தசைகள் ஓவர்டைம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இதயம் பலம் குறைந்து நோய்களுக்கு ஆளாகிறது.

இரத்தத்தில் கலந்த கொழுப்பு இரத்தக்குழாய்களில் அங்கங்கே சிறுசிறு கட்டிகளாகத் தேங்கிவிடும். இதனால் இதயம் மற்றும் மூளக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும் அல்லது முழுவமாக தடைபட்டுவிடும். அதுபோன்ற நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த அடைப்புகள் பெரிய அளவில் இருக்கும்போது திடீர் இறப்பும் நேரிடுவதுண்டு.

கொலஸ்டிரால் மற்றும் உடல் எடையக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமாக இதன் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். புகை பிடிப்பவராக இருந்தால் அந்தப் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒருகை பார்ப்பது என்று இறங்கி கண்டபடி சாப்பிட்டு விட்டால் இதய நோய்களுக்கு ஆளாகிவிடுவது உறுதி.

இதய அறுவ சிகிச்சை என்று போய்விட்டால் வலியும், வேதனையும், பணச்செலவும், உயிர்ப்பயமும் ஒருபக்கம் இருக்க, உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் வேளைக்கு வேளை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படும். வாழ்க்கையே வெறுதுத்ப்போய்விடும். இவைகளை மனதில் கொண்டு ருசிக்கு மட்டுமே சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.

இளசுகளுக்கான எச்சரிக்கை


நம நாட்டில் நாகரிக மோகத்தின் தாக்கத்தினால் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது இளம் வயதினரிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக எடை கூடுவதோடு, இரத்தத்தில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் அபாயம் உண்டு. மேலும் தற்போது கணிப்பொறியின் சந்நிதியிலேயே காலத்தக் கழிப்பதை ஆண்களும் பெண்களும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

உடல் உழைப்பே இல்லாத நிலையில் இந்த உணவு வகைகள் உடல் எடையக் கூட்டுவதற்கும், ஊளைச்சதை போடுவதற்கும் அடிப்படையாக அமைகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உணவு வகைகள் இவர்கள கொலஸ்டிராலின் அளவை கணிசமான அளவிற்கு உயர்த்தி இதயநோய் தாக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவை இன்றைய இளசுகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். கணிப்பொறி வேலையப் பற்றியும், கைநிறையப் பெறும் வருமானத்தைப் பற்றியுமே கவலைப்படும் இவர்கள், தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். மிதமிஞ்சிய இத்தனை உணவினால் எதிர்காலம் இவர்களுக்கு இருண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே ஃபேஷனுக்கு அடிமையாகி மோசம் போகாமல் இளைய தலைமுறயினர் தவறான உணவு முறையைத் தவிர்ப்பது நல்லது.

ஃபாஸ்ட் ஃபுட்டுக்குப் பதிலாக இவர்கள் பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தினமும் திராட்சைச் சாறு குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது பல் சொத்தயைத் தடுக்கிறது. மேலும் இது நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி. எல்லின் அளவை ஏழு சதவீதம் வரையில் உயர்த்துகிறது. ஆகவே தினமும் திராட்சையை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

மேலும் இரத்த சோகைஉள்ள பெண்கள் தினமும் 500 கிராம் அளவிற்கு திராட்சப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரங்களில் அவர்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். எனவே ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்திற்கு விடைகொடுத்து பழங்களை உண்ணும் பழைய வழக்கத்திற்குத் திரும்புவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க..!



உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக்  கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது  நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும்  வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில்  வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான  பிரச்சனைகள் வரக்கூடும் என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா  என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்:

 கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற  பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்:

 கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை  ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை:

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட  வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை  பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் ரத்த அழுத்தம்: 

உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ,  அந்த நேரமே உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது  பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக்கோளாறு:


 சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா  உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி:

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில்  மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின்  போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு:

 பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும்.  இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு  அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

மூளை வாதம்:


 மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள்  வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில  சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்..!



1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.


2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.


3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.


4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.


5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.


7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.


8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்

கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா..? தவறா..?



பல கல்லூரி மாணவிகள், மற்றும் இளைஞிகள் “காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் அணிய விரும்புகிறார்கள்.அந்த காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ்களில் சில பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மலர்கள், அல்லது விருப்பமான நிறங்களில் எல்லாம் கிடைக்கின்றன.” கான்டாக்ட் லென்ஸ் அணிவது சரியா? தவறா? என்றும் கேட்கிறார்கள்.கண்ணாடி அணிவதை தவிர்க்க விரும்புகிறவர்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் ஒரு வரப் பிரசாதம்.

அதே நேரம் எச்சரிக்கை, ஒரு தகுதி வாய்ந்த கான்டாக்ட் லென்ஸ் நிபுணரிடம், மையத்திற்கு சென்று அணிவதே சிறந்தது.

ஆன் லைனில் வாங்கி அணிவது கண்ணை இழப்பதற்க்கான முன்னுரை.

மேலும் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அதை உங்களுக்கு வழங்கிய நிபுணர் சொன்ன அறிவுரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு சமையல் வேலை செய்யக்
கூடாது.

நெருப்பின் அருகே செல்லக்கூடாது.

உங்கள் உங்கள் கான்டாக்ட் லென்ஸை நண்பர்கள் அணிந்து கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது.

கான்டாக்ட் லென்ஸை நம்ம கார்ப்பரேஷன் தண்ணீர், மினரல் வாட்டரில் எல்லாம் அலம்பக் கூடாது.

கான்டாக்ட் லென்ஸ் வாங்கியபோது அதற்கென்று கொடுத்த திரவத்தில் தான் அலம்ப வேண்டும்.

முக்கியமான விஷயம் – கண்ணாடி அணிவதற்கான கண் பரிசோதனையும், கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்க்கான கண் பரிசோதனையும் வேறு வேறு.

கண்ணாடிக்கான ப்ரிஸ்க்ரிப்ஷனை வைத்துக் கொண்டு உங்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் வழங்க முடியும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

ஒருவேளை, உங்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் வேண்டாம் கண்ணாடியே அணிந்து கொள்ளுங்கள் என்று கான்டாக்ட் லென்ஸ் நிபுணர் மறுத்து விட்டால், வேறொருவரை சந்தித்து அல்லது நீங்களாகவே ஒரு கண்ணாடிக்கடைக்கு சென்று கான்டாக்ட் லென்ஸ் வாங்கி அணிந்து கொள்ளாதீர்கள்.

உங்கள் கார்னியா (விழி வெண் படலம்) கான்டாக்ட் லென்ஸை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு வலுவில்லாமல் மெலிதாக இருக்கலாம். ஒரு நல்ல ஃப்ரேம் செலக்ட் செய்து கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள். பல நேரங்களில் கண்ணாடி உங்கள் அழகை மட்டுமல்ல, உங்கள் தன்னம்பிக்கையயும் அதிகரிக்கக்கூடும்.

இணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்..!



தற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும், அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால், அதன் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது, பார்க்க முடியாத விஷயங்களே இல்லை, எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இணையம் வாயிலாக படிப்புகளை வழங்கி வருகிறது, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும், பேச முடியும், எங்கோ ஒரு தலைவர் பேசுவதை இணையத்தின் மூலமாக உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என இணையத்தைப் பற்றிய நல்ல விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால், இந்த நல்ல விஷயங்களில் ஒன்றையாவது நமது இளைய சமுதாயம் பயன்படுத்திக் கொள்கிறதா? செல்பேசியில் சிக்கி சீரழிந்த நமது இளைஞர்கள், தற்போது, செல்பேசியில் இணைய சேவையைப் பெற்று மேலும் வேகமாக அழிவுப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இணையமும், தொலைத்தொடர்பும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படும் என்ற எண்ணம் தற்போது மறுக்கப்பட்டு, இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கே இதுதான் காரணமாக உருமாறிவிட்டது.

படிப்புக்காகவும், செய்திகளை அறிந்து கொள்ளவும், செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் எத்தனை இளைஞர்கள் கம்ப்யூட்டரையோ, மொபைலையோ பயன்படுத்துகிறார்கள்.. மிகச் சிலரே. அதற்கு பதிலாக பேஸ்புக் எனப்படும் இணையத்தில் அல்லவா தங்களது வாழ்நாளை எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பொறியியல் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு படிப்புகளில் படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து வேலை செய்யும் இளைஞர்களிடம் சமுதாயத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

தற்போது சமுதாயம் சந்திக்கும் அவலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்த விஷயம் பூஜ்யமாகத்தான் இருந்தது.

இது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டால் சாதாரணம் தான். ஆனால், நமது இளைய சமுதாயத்தின் பொது அறிவுக்கு இவர்கள் ஒரு உதாரணம் என்று எடுத்துக் கொண்டால் அது சமுதாயத்தின் அசாதாரண விஷயம் என்பது தெரிய வரும்.

சமுதாயத்தில் தற்போதிருக்கும் ஒரு அவல நிலை குறித்துக் கூட இளைஞர்கள் தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. இதற்கு உடனடி காரணத்தையும் பலர் வைத்திருக்கிறார்கள்.

 அதாவது, அதிகப்படியான கல்விச் சுமையை காரணம் கூறுகிறார்கள். கல்விக் சுமை காரணமாக செய்தித் தாள் படிக்க முடியாமல் போகும் அதே இளைய சமுதாயம், மொபைலில் பேசவோ, பேஸ்புக் அப்டேட் செய்யவோ தவறுவதில்லை.

நூறில் 25 சதவீதத்தினர் செய்தித்தாள் படித்தால், நூற்றுக்கு நூற்று ஐம்பது பேர் பேஸ்புக் தொடர்பில் இருக்கிறார்கள். பேஸ்புக்கிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் யார் பார்ப்பது? நமக்குத் தேவையானது, நமது நண்பர்களைப் பற்றி கிண்டல் செய்வதும், நமது அழகான புகைப்படங்களை அப்டேட் செய்து அதற்கு பல நூறு லைக் பெறுவதுமே.

இதெல்லாம் இளைய சமுதாயத்தின் பொழுதுபோக்கு அம்சங்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் இது ஒரு போதையாக மாறிவிடக் கூடாது. இதனால் எதிர்காலமே சூன்யமாகிவிடக் கூடாது என்பதுதான் தற்போதைய கவலை.

இணையத்தின் மூலம் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு செய்தியையாவது படிப்பதையும், ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்வதையும், படிப்பு மற்றும் பணி நிமித்தமான விஷயங்களை படித்து உங்களை அதற்கேற்ற வகையில் உருவாக்கிக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் படித்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து உங்களை அறிவுஜீவியாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வழி பின்பற்றி உங்கள் நண்பர்களும் வருவார்கள்.

பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் கல்லூரி படிப்பு மட்டுமே வாழ்க்கையின் லட்சியத்தை அடைய போதுமானதாகாது என்பதை நினைவில் கொண்டு இனியாவது இணையத்தை முன்னேற்றப் பாதையில் பயன்படுத்துவோம்.

லேசான தாடி வளர்க்கும் ஆண்கள் பெண்களை கவருகின்றனர் – ஆய்வில் தகவல்..!



லேசான தாடி வளர்க்கும் ஆண்கள் பெண்களை கவருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் நூதனமாக ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதன்படி 5 மற்றும் 10 நாட்கள் முக சவரம் செய்யாமல் லேசான தாடியுடன் கூடிய ஆண்கள் போட்டோவை பெண்களிடம் காட்டினர். இவர்களில் உங்களை கவருபவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. 351 பெண்கள் மற்றும் 177 திருநங்கைகளிடம் இதற்கு பதில் அளிக்கும்படி கோரப்பட்டது.

அதற்கு 10 நாட்களாக முகச்சவரம் செய்யாமல் லேசான தாடியுடன் கூடிய ஆண்களே தங்களுக்கு பிடித்ததாக பெண்களும், திருநங்கைகளும் தெரிவித்தனர். 5 நாள் தாடி வளர்த்து இருந்த ஆண்களை பிடித்ததாக மிக குறைந்த அளவிலான பெண்கள் கருத்து கூறியிருந்தனர்

மீண்டும் நேசன் இயக்கத்தில் விஜய்....



ஜில்லா படத்தின் வெற்றியை அடுத்து நேசன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜில்லா படம் கல்லா கட்டி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மட்டும் அல்ல விஜய்யும் குஷியாக உள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பில் அசந்து போயுள்ளார் விஜய்.

விஜய் படத்தை முடித்த கையோடு நேசன் தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்க இருந்தார். ஆனால் விஜய் நேசனை அணுகி நாம் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அதையடுத்து நாம் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று நேசனிடம் விஜய் தெரிவித்துள்ளாராம்.

பாம்பு பாதி-பெண்ணில் பாதி' கலந்து பிறந்த சிறுமி...!!!



தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும், கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது 8 வயது சிறுமியாக இருக்கும் மய் லி ஃபே என்ற அந்த சிறுமி பிறந்த போதே அவளது உடலின் கீழ் பகுதி பாம்பின் தோற்றத்துடனும், தலை முதல் மார்பு வரையிலான பகுதி மனித தோற்றத்துடனும் இருந்ததாக அவளது பெற்றோர் கூறுகின்றனர்.

இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உலகில் தோன்றுவது மிக, மிக அரிது என குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுனர்கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்துவ குறியீட்டின்படி, 'செர்பெண்டொசிஸ் மெலியனார்கிஸ்’ அல்லது 'ஜிங் ஜிங் நோய்’ என்று குறிப்பிடுகின்றனர்.

இயற்கை படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த்திக்க இதுவரையில் எவ்வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தாய்லாந்து நாட்டின் மருத்துவ வல்லுனரான டாக்டர் பிங் லாவ் என்பவர் கூறியுள்ளார்.

பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வை தரிசிக்கவும், அவளது உடலை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த மதத்தினர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.

அவர்கள் வழங்கும் காணிக்கை பணத்தின் மூலம் அந்த பெண்ணின் குடும்ப வருமானமும், வாழ்க்கை தரமும் குறுகிய காலத்துக்குள்ளாகவே அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பினும், அவர்களின் நிம்மதியும், தனிமையும் தொலைந்துப் போனதாக மய் லி ஃபே-வின் நெருங்கிய உறவினர் ஒருவர் தாய்லாந்து தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

Sunday, 19 January 2014

பாலசந்தர் பாராட்டிய த்ரிஷ்யம்....!






 மோகன்லால் நடிப்பில் வெளியான 'த்ரிஷ்யம்' படத்தைப் பார்த்திவிட்டு இயக்குநர் பாலசந்தர் அப்படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'த்ரிஷ்யம்'. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. பலர் பல்வேறு மொழிகளில் ரீமேக் உரிமைக்கு போட்டியிட்டு வருகிறார்கள்.

சென்னையில் இப்படத்தினைப் பார்த்த இயக்குநர் பாலசந்தர் 'த்ரிஷ்யம்'படக்குழுவினரைப் பாராட்டி இ-மெயில் ஒன்றினை அனுப்பியிருக்கிறார்.

அதில், " பார்வையாளனைக் குறைவாக மதிப்பிடாமல் புத்திசாலித்தனத்தோடு எடுக்கப்பட்ட படம். நடிகர்களும் இயக்குநரும் இணைந்து ஒரே நோக்கில் பணியாற்றினால் படம் எவ்வளவு நன்றாக வரும் என்பதற்கு உதாரணம் ‘த்ரிஷ்யம்’. " எனத் தெரிவித்துள்ளார்.

விமர்சகர்கள் மத்தியில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் 'த்ரிஷ்யம்' பெறும் வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது.

ஜாக்கிங் செல்பவரா நீங்கள்? - எச்சரிக்கை..!!!




உடல் பருமனாக உள்ளவர்கள் தங்கள் எடையை குறைக்க ஜாக்கிங் செல்கின்றனர். ஆனால் அது ஒரு நல்ல பயிற்சி அல்ல என தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து லண்டனை சேர்ந்த பிரபல பயிற்சியாளர் கிரேக் புருக்ஸ் கூறியதாவது:-

உடல் எடையை குறைக்க பெரும்பாலானவர்கள் மெதுவாக ஓட்டப்பயிற்சி (ஜாக்கிங்) எப்போதும் சிறந்ததாக இருக்காது. பொதுவாக உடல் எடை அதிகரிப்பதில் கொழுப்பின் பங்கு அதிகம் உள்ளது. அதை குறைப்பதற்காகவே இப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

கொழுப்பு முக்கியமானது. இது தான் உடலின் சக்தியை உற்பத்தி செய்யும் எந்திரமாக திகழ்கிறது. அவற்றை குறைக்க மெதுவாக ஓடும் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சக்திக்காக உடல் மேலும் கூடுதலாக கொழுப்பை உற்பத்தியை செய்கிறது.

எனவே இது மேலும் உடல் எடையைதான் அதிகரிக்கும். அதே வேளையில் மிக வேகமாக ஓடலாம். இது திறமையை வளர்க்க உதவும். அதற்காக குறைந்த அளவிலேயே சக்தி செலவிடப்பட்டு சில கலோரிகளே வீணாகும். ஆனால் கால் மூட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்றார்.

" மாமியாரின் அன்புப் பரிசு...!!!




ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..

அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்
ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு
படகுப் பிரயாணம் போனாள்..
நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா வ
விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம்
புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..

அதன் கண்ணாடியில்
ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..
" மாமியாரின் அன்புப் பரிசு..

"ரெண்டாவது மருமகனுக்கும்
இந்த சோதனை நடந்தது.. அவரும்
ஒரு மாருதி கார் வென்றார்.."
மாமியாரின் அன்புப் பரிசாக..
".
மூன்றாவது மருமகனுக்கும் இந்த
சோதனை நடந்தது.. அவர்
கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு'
உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார்-லாம் வேணாம்.. சாவுற வரைக்கும்
சைக்கிள்ல போயிக்கிறேன்..த்து பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?"

மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன்
வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் ROLLS ROYCE கார்
நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு"
என்ற அட்டையோட….!

மீண்டும் அஜீத்துடன் இணைகிறார் சிவா....




பொங்கலுக்கு வந்த 'வீரம்' ஹிட்டால் மகிழ்ச்சியில் இருக்கும் அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார்.

ஜோடியாக அனுஷ்காவை தேர்வு செய்துள்ளார்கள். முதல் தடவையாக இருவரும் இப்படத்தில் இணைகின்றனர்.

இதில் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன.

அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு அஜீத்தும் டைரக்டர் சிவாவும் மீண்டும் இணையப் போகிறார்களாம்.

கணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்து கொள்ள முழு உரிமை!- ஆர் டி ஐ தகவல்!




”வீட்டு பராமரிப்பு காரணங்களுக்காக அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை தெரிந்துகொள்ள அவர்களின் மனைவிக்கு முழு உரிமை உள்ளது. மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, பொதுமக்களுக்காக வேலை செய்யும் அரசு உழியர்களின் சம்பள விபரத்தை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களாகவே ஆர்டிஐ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். ”என்று மத்திய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த ஜோதி ஷெகராவத் என்பவர், டெல்லி மாநில அரசின் உள்துறையில் பணிபுரியும் தனது கணவரின் சம்பள விபரத்தை கேட்டு கணவரின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால், தனது சம்பள விபரத்தை தெரிவிக்க கூடாது என பெண்ணின் கணவர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தார். அதை தொடர்ந்து பெண்ணின் கோரிக்கையை அலுவலகம் நிராகரித்தது.

இதனால் அந்த பெண், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ கணவரின் சம்பள விவரத்தை கேட்டு மத்திய தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இது போன்று வரும் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் நிராகரிக்க கூடாது.

அது ஆர்டிஐ சட்டத்திற்கு எதிரானது. மேலும், அபராதத்திற்குரிய செயல் என டெல்லி உள்துறை அலுவலகத்திற்கு தகவல் ஆணையர் கண்டனம் தெரிவித்தார்.

இது பற்றி மத்திய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஸ்ரீதர் ஆச்சார்யலு,”வீட்டு பராமரிப்பு காரணங்களுக்காக அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை தெரிந்துகொள்ள அவர்களின் மனைவிக்கு முழு உரிமை உள்ளது.

மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, பொதுமக்களுக்காக வேலை செய்யும் அரசு உழியர்களின் சம்பள விபரத்தை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களாகவே ஆர்டிஐ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், மக்களின் வரி பணத்திலிருந்து தான் வழங்கப்படுகி றது. மேலும், அவர்களின் சம்பள பட்டியலை தெரிவிப்பது ஆர்டிஐ சட்டத்தின்படி கட்டாயமாகும். எனவே, இதுபோன்று சம்பளவிபரத்தை தெரியபடுத்துவது மூன்றாவது நபருக்கு தெரிவிப்பதாக கருத இயலாது.

இது போன்று சம்பள விபரம் கேட்டு வரும் விண்ணப்பங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்க இயலாது என கூறி நிராகரிக்க முடியாது”என்று அவர் தெரிவித்தார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாடகர் எஸ்.பி.பி-க்கு உடல் நலக்குறைவு...



தென் ஆப்ரிக்காவில் சர்வதேச இந்திய திரைப்படவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா இந்திய மற்றும் தென்னாப்ப்ரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. இருநாடுகளின் பிராந்திய மொழிகளுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சனிக்கிழமை இரவு அன்று தொடங்கப்பட்ட இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி திரைப்படத்தின் பாடல் வரிகளை 15 மொழிகளில் பாடிய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு (67) வாழ்நாள் சாதனையாளருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருதுபெற்ற அவருக்கு உடனடியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து அவரை தனிவிமானம் மூலம் சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து விருந்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

உணவுப் பழக்கம் தனிமனித உரிமை..!



 நீலாங்கரையிலுள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்து, அந்தக் கோயிலின் பக்தர் என்று ஒருவர் கூறிக்கொண்டு தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து அரசுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. வழக்கைத் தொடர்ந்தவர் கூறிய காரணம்: கோயில் நிலத்தில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் உள்ளத்தைப் புண்படுத்துமாம். மீனவர்கள் குடியிருப்பு அதிகம் உள்ள அந்தக் கிராமத்தின் உபதேவதைக் கோயில் ஒன்றில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் மனதை எப்படிப் புண்படுத்தும் என்று தெரியவில்லை. வழக்கின் அடிப்படையான வாதம் ‘அம்மனும் சைவமா?’ என்பதுதான்.

கண்ணப்ப நாயனாரின் பன்றிக்கறி

சைவ மதத்தின் பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனாருக்கும் (பன்றிக்கறி படைத்தவர்), சிறுத்தொண்ட நாயனாருக்கும் (பிள்ளைக்கறி படைத்தவர்) சிறப்பான இடத்தைக் கொடுத்துவிட்டு, கடவுளரைச் சைவமாக்க முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் காளத்திநாதனிடம் வேண்டுவதாக இவ்வாறு பாடப்பட்டுள்ளது:

“நாதனே! அமுது செய்ய
  நல்லமெல் லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு
  கொண்டிங்கு வருவே னென்பார்!”

சைவ உணவுமயமாக்கல்

சமீப காலங்களில் சைவ, அசைவ உணவுகள் பற்றிய பட்டிமன்றங்கள் பொதுவெளிகளில் பிரபலமாகியுள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவைச் சத்துணவுத் திட்டம் என்று அறிவித்த அரசு, ஏழைக் குழந்தைகளின் புரதச்சத்து போதாமையைக் கருதி, வாரத்தில் மும்முறை, அவித்த முட்டைகளை அளித்து வருகிறது. இதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பேதும் இல்லாதது மட்டுமன்றி, தமிழகக் குழந்தைகளின் உடல்நலம் பெரிதும் முன்னேறியுள்ளது. முட்டை எடுத்துக்கொள்வதைத் தடுக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, மாற்று உணவாக வாழைப்பழம் வழங்கப்பட்டுவருகிறது. எனினும் மதிய உணவில் முட்டையைத் தவிர்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சொற்பமே.

பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சி நடத்தும் மத்தியப் பிரதேசத்திலும் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தைச் சீராய்வு செய்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில், வாரம் மும்முறை அவித்த முட்டைகள் அளிக்கப்பட்டன. இந்து மதத்தின் பாதுகாவலன் என்று அவதரித்துள்ள அந்த அரசு, பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டைகள் போடுவதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. பா.ஜ.க. அமைச்சர் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மையானோர் சைவர்கள் என்றும், பெற்றோர்கள் அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என்றும் விளக்கம் கூறினார். இதைப் பற்றி விமர்சனம் செய்த ஊடகங்கள் மத்தியப் பிரதேசத்தில் 35 சதவீதத்தினரே சைவர்கள் என்று கூறியது. இந்து மதத்தை ஒருமுகப்படுத்தும் செயல்திட்டத்தில் சரஸ்வதி வந்தனம், சூரிய நமஸ்காரம், கோ பூஜை என்று தொடர்ச்சியாகப் பள்ளிக்கூடங்களைத் தங்களது சோதனைக்கூடங்களாக்கியுள்ள பா.ஜ.க-வினரின் அடுத்த முயற்சியே சைவ உணவுமயமாக்கல் திட்டமாக இருக்கலாம்.

சம்ஸ்கிருதமயமாக்கல்
சைவ, வைணவ மதங்களில் மறுமலர்ச்சி என்று சொல்லக்கூடிய 10-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, சமண மதத்துடன் கருத்துப் போர் நடத்திய பின் ஏற்பட்ட புதிய மாறுதலே சைவ உணவையும் மத வழக்கங்களுடன் பிணைக்கும் செயல். பக்தி மார்க்கத்தைப் பலதரப்பட்டவர்களிடமும் எடுத்துச் சொல்லும் முயற்சியில் எழுதப்பட்டவையே நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் வாழ்க்கைப் புராணங்கள். அனைத்துச் சாதியினரையும் இணைக்கும் வகையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர்களுடைய வாழ்க்கை, புராணங்களாக்கப்பட்டது. இன்றும் சைவ உணவுப் பழக்கம் என்பது, சாதிக்கட்டுமானத்தின் உயர்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சில சாதியினரைத் தவிர்த்து, மற்றவர்களிடம் காணப்படுவதில்லை. சாதிக்கட்டுமானத்தில் உள்ள ஒவ்வொரு சாதியினரும் தங்களை அடுத்த உயர்கட்டத்துக்கு எடுத்துச் செல்வதை ‘சம்ஸ்கிருதமயமாக்கல்’ என்று சமூகவியல் அறிஞர் எம்.என். னிவாஸ் குறிப்பிட்டுள்ளார். அசைவ உணவு உண்டுவந்த சில சமூகத்தினரும் சைவ உணவுக்கு மாறிவிட்டனர். அதுபோலவே “நீங்களும் உஜாலாவுக்கு மாறவில்லையா?” என்று கேட்பது தவறு.

பிராமணர்கள் அசைவம் உண்பார்களா?

உணவுப் பழக்கம் தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. அதைச் சமயக் கட்டுப்பாடாக ஆக்கவும் அதையொட்டி மனித உறவுகளைப் பிரித்துக்கொள்வதும் ஏற்கத் தக்கதல்ல. வேத காலத்திய பிராமணர்கள் புலால் உண்டிருக்கிறார்கள். அதேபோல், இன்றைக்கும் வடஇந்திய பிராமணப் பிரிவுகள் சிலவற்றில் மீன் மற்றும் ஆட்டுக்கறி உண்பது பழக்கத்தில் உள்ளது. அதையெல்லாம் மூடிமறைத்து, சைவ உணவுப் பழக்கத்துக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் திருப்ப முனைவது வீண் செயல். ‘சர்வதேச சைவர்கள் காங்கிரஸ்’ கூட்டங்களில் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்ட பிரமுகர்களைப் பேசச் சொல்வதும் அது மட்டுமே உலகத்தின் மிகச் சிறந்த நெறிமுறை என்று பிரச்சாரம் செய்வதும் பலரது மனதையும் புண்படுத்தும். வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே மிருகங்களைப் பலியிடுவதைத் தடைசெய்யச் சட்டம் இயற்றிய தமிழக அரசு, மக்களின் கோபக் கனலைக் கண்டு விரைவிலேயே அந்தச் சட்டத்தை ரத்துசெய்ததை இங்கு நினைவுகூரலாம்.

உணவுப் பழக்கத்தை வைத்து மனிதர்களைத் தனிமைப்படுத்துவதும், அந்தப் பழக்கங்களைக் கேலிசெய்வதும் விரும்பத் தக்க செயல் அல்ல. இன்றைக்குச் செய்திப் பத்திரிகைகளில் ‘வாடகைக்கு வீடு’பற்றி வரும் வரி விளம்பரங்களைப் பார்த்தாலே தெரியும். நகர வீட்டு உரிமையாளர் பலர் தங்கள் வீட்டில் குடியிருக்க வருவோர் சைவமாக இருக்க வேண்டும் என்ற விளம்பரங்கள்தான் பெரும்பான்மையானவை. உணவுப் பழக்கத்தை வைத்து பிராமணர் அல்லாதவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களைத் தவிர்க்கவே இத்தகைய புத்திசாலித்தனமான ஏற்பாடு. அசைவர்கள் வாடகை வீடு பிடிக்க எங்கு செல்வார்கள்? என்ற கேள்விக்கு யாரும் பதில் கூறுவதில்லை. அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள், நிறுவனங்களின் குடியிருப்புகள் போன்றவற்றில் குடியிருப்போருக்கு இடையே இந்தப் பிரச்சினைகள் எழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சைவ நீதிமன்றம்

உயர் நீதிமன்றத்தின் மதுரை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி விடுதிகளில் அசைவ உணவு கிடைப்பதில்லை என்று அங்குள்ள வக்கீல்கள், வழக்கறிஞர் ரத்தினத்தின் தலைமையில் போர்க்கொடி உயர்த்தினார்கள். அவர்களது கோரிக்கைக்கு செவிமடுக்காத நிர்வாகத்தை எதிர்த்து வளாகத்தில் உள்ள விடுதியில் ஒரு நாள் அவர்களே அசைவ உணவை விநியோகிக்க முற்பட்டனர். ஈத் பண்டிகை அன்று ஒட்டகங்களை வெட்டக் கூடாதென்று ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஒட்டகங்கள் மிருகங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வராததோடு மட்டுமல்லாமல், மதச்சார்பான பண்டிகைகளின்போது வெட்டப்படும் மிருகங்களுக்கு அந்தச் சட்டத்தில் விதிவிலக்கு உண்டென்று கூறி, உயர் நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடிசெய்தது. சிறைக் கைதிகளை எல்லாம் அரசு சைவபட்சியாக மாற்றிவிடாமல் இருக்கவும், அந்தக் கைதிகளுக்கும் புரதச் சத்து தேவை என்பதாலும் தமிழகச் சிறைகளிலும் வாரம் ஒருமுறை அசைவ உணவு கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவை ஏற்று சிறைக் கைதிகளுக்கும் இப்போது அசைவ உணவு வழங்கப்படுவது பாராட்டத் தக்க செயல்.

மத உணர்வும் கறிக் கடைகளும்

சமண மதத்தினரின் ‘பர்யூஷான்’ விரதத்தின்போது 18 நாட்கள் கறிக் கடைகளை மூடச் சொல்லி அகமதாபாத் நகராட்சி போட்ட உத்தரவை எதிர்த்து, கறிக் கடைக்காரர்கள் போட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் 2008-ல் தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பில் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே கறிக் கடைகளை மூடும்படியான உத்தரவு ஒரு சிறுபான்மை மதத்தினரைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக என்பதால், அதில் தவறில்லை என்றும் அதே சமயம், ஆண்டு முழுவதும் மக்கள் எவ்வித உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் நிர்ப்பந்திக்க முடியாது என்றும், அது தனிமனித சுதந்திரத்துக்கு உட்பட்டதென்றும் கூறப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட கறிக் கடைகளில் மாமிசம் வாங்கிப் பழக்கப்பட்ட மக்கள், அதற்காகத் தொலைதூரங்களுக்குச் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டது.

சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மீனும் கோழியும் விற்பனைசெய்த கடைகளை மூடிவிட்டு, பேரூராட்சிக்கு வெளியில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு போட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. சாதாரண முட்டை வாங்குவதற்குக்கூட ஊருக்கு வெளியில் போக வேண்டும் என்று வற்புறுத்துவது தவறென்றும், அது பொருட்களின் விலையை உயர்த்தவே தூண்டுமென்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஈரோடு மாவட்டத்தில், கவுந்தம்பாடி வாரச் சந்தையில் மாட்டுக்கறி விற்ற அருந்ததியர் குடும்பத்திடம், கடையை மூடச்சொன்ன ஊராட்சித் தலைவருக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடைசெய்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளரின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்துசெய்ததோடு மட்டுமல்லாமல், உணவுப் பழக்கங்களில் அரசின் தலையீட்டைக் கண்டித்தது.

வேறு மாநிலங்களிலிருந்து சுகாதாரக் கேடான மாமிசங்கள் நகராட்சிப் பகுதிக்குள் வருவதை, சுகாதாரத் துறை தடைசெய்வதுடன், உள்ளூரில் உள்ள ஆட்டுத்தொட்டியை நவீனப்படுத்தி, உடல்நலக் கேடு விளைவிக்காத வகையில் நல்ல சுகாதாரமான மாமிசப் பொருட்களை வழங்கும்படி தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளும் மாநகராட்சிகளும் சட்டப்படி கடமைப்பட்டுள்ளன.